யாழில் கோர விபத்தில் தாயும் மகளும் பலி; எமனாகும் டிப்பர்கள்யாழ்ப்பாணம், சாவகச்சேரி – புத்தூர் வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். 

இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

[

எமனாகும் டிப்பர்கள்

புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. 

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளதாகத் தெரியவருகிறது. 

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை கடந்தவாரம் யாழில் டிப்பர் மோதி இடம்பெற்ற விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments