“இந்தக் கடினமான நேரத்தில் மொஸ்கோ தெஹ்ரானுக்கு ஒரு விசுவாசமான நண்பராகவும் நம்பகமான கூட்டாளியாகவும்” தொடர்கிறது என்று ரஷ்ய ஜனாதிகதி புடின் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிய செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடினமான சோதனை
ஈரானியப் புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,
ஈரானிய மக்கள் “இந்தக் கடினமான சோதனைகளை கண்ணியத்துடன் கடந்து செல்வார்கள்” என்று நம்புவதாக புடின்,உச்சதலைவர் மொஜ்தபா கமெனி மற்றும் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியானிடம் கூறியதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
