அரசாங்கத்தால் கொண்டுவரப்பட இருக்கின்ற கிவுல் ஓயா திட்டத்தை கைவிட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இனப்பரம்பல் மற்றும் நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளும் நோக்கில் கொண்டுவரப்படவிருக்கின்ற கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் கை விட வேண்டும் என்று சபை உறுப்பினர் குறிஞ்சி குமரனால் நேற்று (20) பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது.

இந்தநிலையில், குறித்த பிரேரணைக்கு 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 4 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் 12 வாக்குகளால் வெற்றிபெற்றது.

எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்கள்

குறித்த பிரேரணை பிரதேச சபையுடன் தொடர்புடைய விடயம் அல்ல என தெரிவித்து தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 4 பேரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பருத்தித்துறை பிரதேச சபையின் அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது சபை சார்ந்த விடயங்களை தவிசாளருடன் மட்டும் பேச வேண்டும் என்றும், அதை விட ஆலோசனைகளை சபை செயலாளரிடம் பெற முடியும் என்றும், எந்தவொரு பிரதேச சபை உறுப்பினரும் சபை உத்தியோகத்தரிடம் நேரடியாக பேச முடியாது என்றும் தெரிவித்தார்.

கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் : பருத்திதுறையில் தீர்மானம்...! | Sl Government Should Abandon The Kivul Oya Project

அதனைத் தொடர்ந்து சபையின் செலவுகள் மற்றும் ஏனைய விடயங்களுக்கான நிதி அனுமதிகள் சபையால் வழங்கப்பட்டது.

மக்களின் முறைப்பாடுகள் அதன் மேல் எடுக்கப்படட நடவடிக்கைகள் என்பன சபைக்கு அறிவிக்கப்பட்டதுடன் சபையின் அனுமதிகளும் பெறப்பட்டு வீதிகள் அபிவிருத்தி, மின் விளக்குகள் பொறுத்துதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments