ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

வளைகுடா போர் பதற்றங்களுக்கு மத்தியில் “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் நிறுத்த  உத்தரவு

இந்தப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தனது ‘TruthSocial’ தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுடனான இந்த விரிவான மற்றும் ஆழமான ஆலோசனைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments