ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நேரடி அல்லது மறைமுகமான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம், பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது

பின்வாங்கிய ட்ரம்ப்

 ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள அந்த அதிகாரி, “மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்களது தாக்குதல் இலக்குகளில் அடங்கும் என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே, அவர் (ட்ரம்ப்) தற்போது பின்வாங்கியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை : ட்ரம்பின் பொய்யை அம்பலப்படுத்தியது ஈரான் | No Dialogue Between Tehran And Washington

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றுகள், எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்கும், இராணுவத் திட்டங்களுக்குக் கால அவகாசம் பெறுவதற்கும் செய்யப்படும் முயற்சி என்று ஈரான் நிராகரித்துள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி பல ஈரானிய அரசு சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

“பதட்டங்களைக் குறைப்பதற்காக” பிராந்திய நாடுகளிடமிருந்து “முன்முயற்சிகள்” இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியதாக மெஹர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எங்கள் பதில் தெளிவாக உள்ளது

“அவை அனைத்திற்கும் எங்கள் பதில் தெளிவாக உள்ளது: இந்தப் போரைத் தொடங்கிய தரப்பு நாங்கள் அல்ல, மேலும் இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் வோஷிங்டனிடம்தான் அனுப்பப்பட வேண்டும்.”

பேச்சுவார்த்தை : ட்ரம்பின் பொய்யை அம்பலப்படுத்தியது ஈரான் | No Dialogue Between Tehran And Washington

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதால், மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் சூழலில் பெரும் குழப்பமும் பரபரப்பும் நிலவி வருகின்றது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments