ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பகைமையற்ற கப்பல்கள் (Non-hostile vessels) செல்வதற்கு ஈரான் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

இந்தநிலையில், சர்வதேச கடல்சார் அமைப்பிற்கு (IMO) ஈரான் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தத் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்த அறிவிப்பின்படி, இக்கப்பல்கள் கண்டிப்பாக ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து (Coordination) செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

இருப்பினும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இப்போரில் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளின் கப்பல்கள் பகைமையற்றவை என்ற பிரிவில் வராது என்பதால் அவை இந்த நீரிணையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தடுக்கவே இத்தகைய விகிதாசாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரானின் முக்கிய அறிவிப்பு! | Iran News Announcement About Strait Of Hormuz

தற்போதைய நிலவரப்படி பாரசீக வளைகுடா பகுதியில் சுமார் 3,200 கப்பல்கள் தேங்கிக் கிடப்பதாகத் தெரியவந்துள்ளது.

உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்தப் பாதையில் ஈரானின் இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து (Coordinated transit) முறை, சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிசக்தி நெருக்கடியைச் சற்றே குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments