ஈரானுடன் அமெரிக்கா நடத்தி வரும் போர், அணு ஆயுதங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் தனது நாட்டின் முடிவு சரியானது என்பதை நிரூபித்துள்ளது என வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.

நேற்று (24) வட கொரியாவின் உச்ச மக்கள் சபையில் உரையாற்றிய கிம், அமெரிக்காவின் நடவடிக்கைகளை அரசு ஆதரவு பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்புகள் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதன்படி, அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா கொடுக்கும் அழுத்தமும், அவர்களின் ஏமாற்று கதைகளை நிராகரிக்கும் வட கொரியாவின் முடிவும் நியாயமானவை என்பதை தற்போதைய நிலைமை தெளிவாகக் காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அணுசக்தி வலிமை

அத்தோடு, வட கொரியாவின் அணுசக்தி வலிமை மீளப்பெற முடியாத ஒன்று என தெரிவித்த கிம், அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் அமெரிக்காவின் இராணுவ சக்திக்கு ஆளாகின்றன என்பதை ஈரான் மோதல் உறுதிப்படுத்துவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகள் இதுபோன்ற அழுத்தங்களைத் தடுக்க முடியும் என்று தான் நீண்ட காலமாக நம்புவதாகவும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் வலியுறுது்தியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments