மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்றும் இச்சம்பவத்தில் நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி வி (26) கொக்கட்டிச்சோலை நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கரவண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பை அதிர வைத்த சம்பவம்; சட்டத்தரணிகள் வரக்கூடாது; மக்கள் ஆர்ப்பாட்டம் | Batticaloa Well Incident Lawyers Public Protest

பாரிய கொள்ளைச் சம்பவங்கள்

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே கிணற்றில் இன்னுமொரு பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவங்கள், அவற்றுடன் தொடர்புபட்ட கொலையின் பின்னணி கண்டறியப்பட்டு, பின்னர், பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பை அதிர வைத்த சம்பவம்; சட்டத்தரணிகள் வரக்கூடாது; மக்கள் ஆர்ப்பாட்டம் | Batticaloa Well Incident Lawyers Public Protest

கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர்கள் மூவரையும் 4 நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கும், மற்றைய இருவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை 27ஆம் திகதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மட்டக்களப்பை அதிர வைத்த சம்பவம்; சட்டத்தரணிகள் வரக்கூடாது; மக்கள் ஆர்ப்பாட்டம் | Batticaloa Well Incident Lawyers Public Protest

இந்நிலையில் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது, சந்தேக நபர்களுக்கு உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டும், மாவட்டத்தில் இனி இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாவண்ணம் பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments