யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் – கட்டைப்பிராயை சேர்ந்த 56 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; விசாரணையில் வெளியான தகவல் | Drunk Jaffna Father Of Three Suffers Tragedy

மரண விசாரணை

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் மதுபோதையில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 1 வீதியில் உறங்கியுள்ளார்.

இதன்போது வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின்னர் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, இன்று உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments