வடக்கு கிழக்கில் பெண்களை நோக்கி ஏவி விடப்படும் கொலைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அனைத்தும் ஏதோவொரு பின்னணியின் தாக்கம் என்பதாக ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் வடக்கு கிழக்குக்கான பணிப்பாளர் வாசுகி சுதாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (26.03.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதை குறிப்பிட்டார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை

அவர் மேலும் கூறியதாவது,

பெண்களுக்கெதிரான வன்முறைகள் தற்போது உச்சம் அடைந்துள்ளன. குறிப்பாக, கிழக்கில் பெண்களை கொன்று, கடத்தி கிணற்றில் வீசும் மற்றும் கொள்ளை அடிக்கும் நிலை உருவாகி உள்ளது. வடக்கில் காதலனுக்காக தாயையே கொல்லும் நிலைக்கு மகள்களை உந்தும் சூழ்நிலையும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முக்கிய காரணமாக போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த போதைப்பொருள் திட்டமிட்டே சில பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களை பாதிக்கிறது. பாடசாலை மாணவர்களிடையே பரவியுள்ள போதைப்பொருள், இன்று அனைத்து மாணவர்களையும் பாதிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

இதற்கு சிலர் முறையாக உடன்பட்டிருப்பதாகவும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு அக்கறை காட்டுவதிலும், செயற்பாடுகளை கவனிப்பதிலும் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால், போதைப்பொருள் பயன்பாட்டை இல்லாதொழிக்க மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

சட்டத்தரணிகளும் இந்த விடயத்தில் கரிசனையுடன் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வழி அமைப்பதும் அவசியம். மேலும், காணாமல் போன உறவுகள், வெள்ளைக்கொடி விவகாரம், இனப்படுகொலை போன்ற தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தற்போதைய அரசு கடந்த அரசுகளின் நகலாக இருக்கிறது என கவலையுடன் தெரிவித்துள்ளார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments