அமெரிக்காவின் செயல்பாடுகளை எதிர்க்கும் நாடுகளில் வடகொரியா முக்கியமானது. அந்த நாட்டிற்கு தற்போது கிம் ஜாங் ஜனாதிபதி இருக்கிறார்.

பல வருடங்களாகவே கிம் ஜாங்கின் குடும்பம்தான் வடகொரியாவில் அதிபராக தொடர்ந்து வருகிறது. கிம் ஜாங்கிற்கு பின் அவரின் மகள் ஜனாதிபதியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை ; ஒற்றை சோதனையால் உலகை அதிர வைத்த வடகொரிய ஜனாதிபதி | North Korean Leader Shocks World With Missile

ஏவுகணை சோதனை

கடத்த சில நாட்களாகவே அதிபர் கிங் ஜாங் தனது மகளுடன் போர் விமானங்களை சோதனை செய்வது, பீரங்கியில் அமர்ந்து செல்வது போன்ற புகைப்படங்கள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில்தான் அமெரிக்காவை தாக்கும் திறனுடைய அதிக உந்துவிசை கொண்ட அதி நவீன திட எரிபொருள் ஏவுகணை எஞ்சினை ஜனாதிபதி கிங் ஜாங்கின் மேற்பார்வையில் வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்திருக்கிறது.

அணு ஆயுத ஏவுகணைகளின் உந்துவிசையை 2500 கிலோ நியூட்டன் வரை அதிகரித்து அமெரிக்காவில் எந்த பகுதியையும் அதிவேகத்தில் தாக்கும் திறன் இந்த சோதனையில் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈரான் மீது போர் தொடுத்துள்ள அமெரிக்காவுக்கு எதிரான வட கொரியா கருத்து தெரிவித்து வரும் நிலையில், வட கொரியா அதிரடியான முக்கிய பரிசோதனைகளை செய்து வருது உலக நாடுகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments