ஈரானின் மிகப் பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைத் திறக்கப்படவில்லை என்றாலும், ஈரான் மீதான “ஆபரேஷன் எபிக் ப்யூரி” இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் விரும்புவதாக கூறப்படுகின்றது.

மிகப்பெரிய வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் 

இன்று  ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், மிகப்பெரிய வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் காணொலி ஒன்றை எதுவும் குறிப்பிடாமல் பகிர்ந்திருந்தார்.

இந்த தாக்குதலானது, ஈரானின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கான இஸ்ஃபஹான் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 கிலோ பங்கர் – பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்க விமானப் படை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் மத்திய பகுதியில் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கில் அமைந்துள்ள இஸ்ஃபஹான் கிடங்கு, இராணுவம் மற்றும் அணுத் திட்டங்களுக்கு முக்கியப் பங்கு வகித்து வருகின்றது.

ஈரானிடம் உள்ள 540 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம், இஸ்ஃபஹான் நகரில் நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக இஸ்ஃபஹான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments