யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிஷானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்ட நிலையில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாத குழந்தையாக இருக்கும்போது கடற்றொழிலுக்கு சென்றவேளை படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சாதனை 

அதன்பின்னர் குறித்த மாணவியின் தாயாரே கூலி தொழில் செய்து அந்த மாணவியை கற்பித்து வந்த நிலையில் இவ்வாறு சாதனை புரிந்துள்ளார்.

யாழில் தந்தையை இழந்தும் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்! | Jaffna Student Achieves Success In Al Examination

நிம்மதியாக இருந்து கல்வி கற்பதற்கே ஒரு சீரான வீடு இல்லாத நிலையிலும் குறித்த மாணவி சாதித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments