நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் கொலை குற்றம் சுமத்தப்பட்டிருந்த மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நுவரெலியா உயர் நீதிமன்றத்தில் மிக நீண்ட விவாதத்திற்கு பின் உயர் நீதிமன்ற நீதிபதி நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மூன்று வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கும் அனைத்து பிரதிவாதிகளும் குற்றவாளிகள் எனக் கண்டறிந்து நுவரெலியா உயர் நீதிமன்ற நீதிபதி வியாழக்கிழமை (02) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அதன்படி 1998-ஆம் ஆண்டு நானுஓயா டெஸ்போட் பகுதியில் வைத்து டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 57 வயது நபர் ஒருவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது லிந்துலை மெரயா தோட்டத்தை சேர்ந்த 47 வயது தமிழ் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மரண தண்டனை
மேலும் 2009-ஆம் ஆண்டு பட்டிபொல பொலிஸ் பிரிவில் தனது தாய், மனைவி மற்றும் குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக 55 வயது குற்றவாளிக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
1990-ஆம் ஆண்டில் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் முகமது சுமன் என்பவரைக் கொலை செய்த வழக்கில், ஒரே பகுதியைச் சேர்ந்த 64 வயதான வீரரத்ன மற்றும் 62 வயதான கருப்பைய அன்னாதுரை ஆகிய இரு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
