மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி காத்தான்குடியில் ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

காத்தான்குடியில் இருந்து சம்பவ தினமான நேற்று புதன்கிழமை (1) இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பை நோக்கி உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது முன்னால் சென்ற மோட்டர் சைக்கிளின் புகைபோக்கியில் தட்டுப்பட்டதையடுத்து மோதி விபத்துக்கு உள்ளானதில் இளைஞன் சம்பவ இடம்திலே உயிரிழந்தார்

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் விபத்தில் உயிரிழப்பு : மட்டக்களப்பில் துயரம் | Youth Dies In Accident In Batticaloa

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் கத்தார் நாட்டில் தொழில் புரிந்து வந்தவர் என்பதுடன் விடுமுறைக்காக வந்திருந்தவர் எனவும் தனது விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை(05) கத்தார் செல்ல இருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர்  மேலதிக விசாரணை

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் விபத்தில் உயிரிழப்பு : மட்டக்களப்பில் துயரம் | Youth Dies In Accident In Batticaloa
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments