ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படைத் தளபதியை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த தாக்குதலால் குறித்த பெரிய கப்பல் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் சம்பவம் குறித்தோ அல்லது ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலோ இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments