குவைத் மீது நடத்தப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கமானது ரேபிட் சென்ட்ரி எனப்படும் தரைவழி வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்பியுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுவும் பணியை ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) படைப்பிரிவு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் சுட்டிக்காட்டிய பிரித்தானிய பிரதமர், “பொறுப்பற்ற செயல்” எனவும், “குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான இரவு நேர ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

பிரித்தானிய அமைப்பு

மேலும், குவைத்தின் பட்டத்து இளவரசருடன் நடந்த கலந்துரையாடலின் போது, ​​பிரதமர் இந்தத் தாக்குதலைக் கண்டித்ததோடு, இரு அதிகாரிகளும் பிரித்தானிய அமைப்பை நிலைநிறுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு மீதான தாக்குதல்! பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்ட முக்கிய இராணுவ அமைப்பு | Attack On Kuwait Oil Refinery

குறிப்பாக பிராந்தியத்தில் உள்ள குவைத் மற்றும் பிரித்தானியா பணியாளர்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பதற்றம் ஒரு பெரிய மோதலாக மாறுவதைத் தடுப்பதற்கும் ரேபிட் சென்ட்ரி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் சமீபத்தில் இந்த அமைப்பை, போர்க்களத்தில் சோதிக்கப்பட்டது என்று விவரித்தார்.

குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பிராந்திய மோதலில் ஈடுபட்டுள்ளன. அவை எதிர்கொண்டுள்ள தாக்குதல்களால் எரிசக்தி நிலையங்கள் போன்ற குடிமை உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் குவைத் வான்வெளிக்குள் நுழைந்த மொத்தம் எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 19 ஆளில்லா விமானங்களை இராணுவம் கண்காணித்து, அவற்றைக் கையாண்டுள்ளதாக குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எறிகணைகளால் உயிரிழப்போ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என குவைத் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments