ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டாவது விமானியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவின் மற்றுமொரு விமானத்தையும் இரண்டு உலங்கு வானூர்திகளையும் சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று (05) தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் விளைவாகப் பல எதிரி விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், இதன் விளைவு அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மற்றொரு அவமானகரமான தோல்வி என்று கூறிய அவர் மேலும், 1980 ஏப்ரலில் தோல்வியடைந்த ‘ஒபரேஷன் ஈகிள் கிளா’ உடன் இதை ஒப்பிட்டார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் இரண்டு பிளாக் ஹாக் உலங்குவானூர்திகள் மற்றும் ஒரு C-130 இராணுவப் போக்குவரத்து விமானம் ஆகியவை அடங்கும் என்றும், அவை அனைத்தும் தெற்கு இஸ்பஹானில் தாக்கப்பட்டு எரிந்த நிலையில் விடப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில் மத்திய ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்களின் படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இரண்டாம் இணைப்பு
ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்தின் சிதைவுகளைக் காட்டுவதாகக் கூறப்படும் ஒரு புகைப்படத்தை, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா இதுபோன்று மேலும் மூன்று வெற்றிகளைப் பெற்றால், அது முற்றிலுமாக அழிந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்
