வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க தவிசாளர் தலைமையிலான சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பரிசோதனை நடவடிக்கை இன்று (10.04) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை

இதன்போது சுகாதாரமற்ற முறையில் இயங்கிவந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. 

குறிப்பாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தாரால் நடாத்தப்படும் உணவகம் உட்பட 4 உணவகங்கள் மற்றும் வெதுப்பக உணவுகளை விறாபனை செய்யும் முச்சக்கர வண்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments