பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படுகிறதா இல்லையா என்பது தமக்கு ஒரு பொருட்டல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “என்ன நடந்தாலும் வெற்றி நமதே. நாம் ஒப்பந்தம் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அது எனக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

பல மணிநேர பேச்சுவார்த்தை

பாகிஸ்தானில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஈரானிய அதிகாரிகளுடன் பல மணிநேரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதிப்படுத்திய ட்ரம்ப், “அந்த நாட்டை (ஈரான்) நாம் முழுமையாகத் தோற்கடித்துவிட்டோம், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: PBS

அதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் அல்லது செய்யாமல் போகலாம், அது முக்கியமல்ல. அமெரிக்காவின் பார்வையில், நாம் வெற்றி பெற்றுவிட்டோம்” என்று அறிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments