அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி பயணம் இன்று(13.4.2026) மாலை முல்லைத்தீவை வந்தடைந்திருந்தது.

கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமானது.

ஊர்தி பவனியானது வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் ஊர்வலமாக சென்று, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாகி அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.

அஞ்சலி 

எதிர்வரும் 19 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இன்றையதினம் (13) மாலை முல்லைத்தீவு நகரினை வந்தடைந்திருந்தது.

குறித்த அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments