கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (1) ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர், உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமாலை, பொந்தர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர், இன்று காலை வழமை போன்று ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.

தமிழர் பிரதேசத்தில் ஆடுமேக்க சென்றவருக்கு நடந்தது என்ன ; காயங்களுடன் சடலமாக மீட்பு | Man Body Recovered With Injuries In Kilinochchi

உடலில் காயங்களுடன் சடலமாக  மீட்பு

இதன்போது, அப்பகுதியில் உள்ள ஓரிடத்தில் அவர் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. உயிரிழந்தவர் முகமாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய இளையவன் நல்லதம்பி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணைகள் தீவிரம்: சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

முதியவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதால், இது கொலையா அல்லது விபத்தா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments