ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படையால் இரண்டு இந்தியக் கப்பல்கள் “ஹோர்முஸ் நீரிணையிலிருந்து மேற்கு நோக்கி வலுக்கட்டாயமாகப் திருப்பி அனுப்பப்பட்டன” என்று சனிக்கிழமையன்று வெளியான எண்ணெய்க் கப்பல் கண்காணிப்புச் சேவையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கை, சர்வதேச கடல்சார் ஆபத்து மற்றும் அழைப்பு அலைவரிசையான சனல் 16 (VHF 156.8 MHz)-இன் இரண்டு பதிவுகளை அடிப்படையாகக் கொண்டது என்று சமூக ஊடக நிறுவனமான X-இல் ராங்கர் டிராக்கர்ஸ் (TankerTrackers) கூறியுள்ளது.

கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு 

” கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கப்பல்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஓமானின் வடகிழக்கில் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த இரண்டு கப்பல்களும் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு | 2 Indian Ships Forced Back From Hormuz Strait

கப்பல்களில் ஒன்று, 2 மில்லியன் பீப்பாய்கள் ஈராக் எண்ணெயை ஏற்றிச் செல்லும் இந்தியக் கொடியிடப்பட்ட VLCC சூப்பர்டேங்கர் ஆகும்,” என்றும் அது மேலும் கூறியது.

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான முற்றுகையைக் காரணம் காட்டி, ஹோர்முஸ் நீரிணை ஈரானின் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் அதன் “முந்தைய நிலைக்கு” திரும்பிவிட்டது என்று இன்றைய தினம் முன்னதாக IRGC-யின் கூட்டுக் கட்டளை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments