சித்திரை புத்தாண்டுக்கு முந்தைய தினமான பலகாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர், பலகாரம் சுட்டுகொண்டிருக்கையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) இரவு உயிரிழந்துள்ளார்.

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை வீதி, 5ஆம் கட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 44 வயதுடைய ஏ.எம். கருணாவதி என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலகாரம் சுட்ட பெண் பரிதாப மரணம்! | Woman Frying Snacks Dies Fire New Year

மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார் 

குறித்த பெண் பலகாரம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென எண்ணெய் சட்டியில் (தாச்சியில்) தீப்பிடித்து அவரது உடலில் பரவியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர், முதலில் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments