வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற தொடருந்து விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியும் சிகிச்சை பலனின்றி நேற்று(25) மாலை உயிரிழந்துள்ளார்.

கடந்த 23.04.2026 அன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்துடன், தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.

மேலதிக விசாரணை

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியான தெய்வகுமார் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து : சிகிச்சை பலனின்றி முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழப்பு! | Accident In Vavuniya Three Wheeler Driver Dies

இந்நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments