அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் 34 வயது குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(24.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் அமைந்துள்ள வீட்டில் 34 வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குடும்பஸ்தர் உயிரிழப்பு

இவ்வாறு உயிரிழந்தவர், 2 வயதுக் குழந்தையின் தந்தையான 220/2, சுட்டார் வீதி வீரமுனை- 3 சம்மாந்துறையை சேர்ந்த சொக்கலிங்கம் கிருஷ்ணராஜ் என்பவர் என தெரியவந்துள்ளது.

மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் கணவர் எடுத்த விபரீத முடிவு - தீவிரப்படுத்தப்படும் விசாரணை | Husband Dies In Dispute With Wife

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், மதுப்பழக்கத்திற்கு உள்ளானவர் என்பதுடன், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவு எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் முதலாம் கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments