நபர் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களைக் பொலிஸ் விசேட அதிரடிப்படை நேற்று (25) கைது செய்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கடந்த 22ஆம் திகதி மட்டக்குளி பொலிஸ் பிரிவில் வைத்து நபர் ஒருவரைக் கடத்திச் சென்று, கழுத்தை நெரித்து நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நபர் ஒருவரைக் கடத்தி நீரில் மூழ்கடித்துக் கொன்ற இளைஞர்கள் ; பொலிஸார் காட்டிய அதிரடி | Youth Abduct Man And Drown Him To Death

மேலதிக நடவடிக்கை

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதாவர்கள் 23 முதல் 36 வயதுக்கு இடைப்பட்ட, கொழும்பு 15 மற்றும் பமுணுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (26) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments