அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்க இரவு விருந்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேகநபராக 31 வயதான கோல் தாமஸ் ஆலன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் Washington Hilton ஹோட்டலுக்கு வெளியே நடைபெற்றது.நிகழ்வில் சுமார் 2,500 விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சந்தேக நபர்

அமெரிக்க ரகசிய சேவை (Secret Service) மற்றும் உள்ளூர்  பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். சமூக வலைதளங்களில் சந்தேகநபர் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபரான கோல் தாமஸ் ஆலன் மெக்கானிக்கல் இன்ஜினீயர் கணினி விஞ்ஞானி சுயாதீன (indie) வீடியோ கேம் உருவாக்குபவர் பகுதி நேர ஆசிரியர் என்பதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப் நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு - நொடியில் நடந்த பயங்கரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான பின்னணி | Shots At Trump Event Trump White House Dinner

அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் California Institute of Technology-இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், பின்னர் கணினி அறிவியலில் முதுநிலை பட்டமும் பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், அவர் NASA Jet Propulsion Laboratory-இல் Summer Undergraduate Research Fellowship திட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

பாதுகாப்பு சோதனை மையத்தை கடக்க முயன்றபோது ஆலன் பல ஆயுதங்களுடன் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம், ஷாட்‌கன்,கைத் துப்பாக்கி,பல கத்திகள்இருந்ததாக கூறப்படுகிறது.

 மிகவும் ஆபத்தான நபர் 

பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியபோது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் ஒரு Secret Service அதிகாரி காயமடைந்தார். அவர் அணிந்திருந்த bulletproof vest காரணமாக உயிர் தப்பினார்.

வன்முறை குற்றத்தில் துப்பாக்கி பயன்படுத்தியது கூட்டாட்சி அதிகாரியை தாக்கியது என்ற குற்றச்சாட்டுகள் ஆலன் மீது பதிவு செய்யப்படும் என அமெரிக்க வழக்கறிஞர் Jeanine Pirro தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சி தேர்தல் நிதிப் பதிவுகளின்படி, 2024-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதற்காக, ஆலன் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நடவடிக்கைக் குழுவிற்கு 25 டொலர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

வாஷிங்டன் மேயர் Muriel Bowser மற்றும் போலீஸ் அதிகாரிகள், இந்த தாக்குதல் ஒரே நபரால் (lone attacker) செய்யப்பட்டதாக நம்புகின்றனர்.

ட்ரம்ப் நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு - நொடியில் நடந்த பயங்கரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான பின்னணி | Shots At Trump Event Trump White House Dinner

டொனால்ட் ட்ரம்ப் இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் ஒரு மிகவும் ஆபத்தான நபர்  பாதுகாப்பு அதிகாரிகள் வீரத்துடன் செயல்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபரின் புகைப்படத்தை ட்ரம்ப் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You may Like this..

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments