வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியில் வாள்வெட்டு – துண்டாகிய பெண்ணின் விரல்வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்றையதினம்(2) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகின.

இது குறித்து மேலும் தெரியவருகையில், ஏற்கனவே அயல் வீட்டு இளைஞருக்கும் குறித்த பெண்ணின் குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு காணப்படுகிறது.

பொலிஸார் விசாரணை

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வேலை முடிந்து வந்தவேளை அவரை வழிமறித்து அவரது துவிச்சக்கர வண்டியை குறித்த இளைஞன் பறித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அவர் தனது மனைவிக்கு கூறிய நிலையில் மனைவி குறித்த இளைஞனுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியில் வாள்வெட்டு - துண்டாகிய பெண்ணின் விரல் | Sword Attack In Mudaliakoil Area Of Vaddukottai

இதன்போது குறித்த இளைஞன் அந்த பெண் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளார்.

வாள்வெட்டில் படுகாயமடைந்த பெண், நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக இவர் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குபவர் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments