2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் தவெக கூறியுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் த.வெ.க. வெற்றி பெற்று, 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்திய அரசியலில் ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டு, சிறிது காலத்திலேயே மக்களின் பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது

விஜய் மிகப்பெரிய சாதனை

அந்த வகையில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தொடர்ந்து விஜய் இப்போது அந்த சாதனையை படைத்து இருக்கிறார்.

முதலமைச்சராகும் விஜய்: வீழ்த்தப்பட்ட திராவிட சாம்ராஜ்யம்: ஆளுநருக்கு பறந்த கடிதம் | Tvk Leader Vijays Letter To The Governor

கடந்த 2024-ம் ஆண்டு கட்சி தொடங்கி விஜய், 2 ஆண்டுகளில் தனது முதல் சட்டசபை தேர்தலிலேயே 233 தொகுதிகளில் தனித்து களம் கண்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

பெரம்பூரில் 53,715 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கில் 27,416 வாக்குகள் வித்தியாசத்திலும் தவெக தலைவர் தலைவர் விஜய் வெற்றிவாகை சூடி உள்ளார்.

தமிழ்நாட்டில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட த.வெ.க. 34.92 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

தி.மு.க. கூட்டணி 74 இடங்களை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களை பெற்றது. இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்தது.

பெரும்பான்மை இல்லை

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் த.வெ.க.வுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.

2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கடிதத்தில் தவெக கூறியுள்ளது. இந்த கடிதத்திற்கு ஆளுநர் விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments