சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் `ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங் நகரில் அமைந்துள்ள ஹுவாஷெங் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று (04.05.2026) மாலை 4:40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வெடிப்பின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் வசித்துவரும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
61 காயமடைந்துள்ளனர்
அதனை தொடர்ந்து, காயமடைந்த 61 பேருக்கு சிகிச்சை வழங்குவதற்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சீனா அரசு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக் கூடியவர்களை கண்டறிய ரோபோக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பட்டாசு நிறுவனத்தின் பொறுப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், தொழிற்சாலை வளாகத்திற்குள் இருந்த இரண்டு வெடிமருந்துக் கிடங்குகள் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
