சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு, த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியிலிருந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமானத்தின் மூலம் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர் உரையாற்றுவார் எனவும் அது 9 கோடித் தமிழர்களிற்கு எதிரானதாகயிருக்கலாம் என கருதப்படுகின்றது,

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும்  பங்கேற்பு

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல் பரவிவருகிறது.

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ராகுல்காந்தி | Vijay Take Oath Chief Minister Rahul Attending

இதனை தொடர்ந்து பல முக்கிய ஆளுமைகளும் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதேவேளை விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் மே 10 காலை 10 மணிக்கு பதவியேற்க நேரம் குறித்துக் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில், பதவியேற்பு விழா அந்நேரத்தில் நடைபெற உள்ளதாகவும் தவெக தலைமைக்கு நெருக்கமான தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.    

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments