தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய பெண்! சந்தேகநபர் அதிரடி கைதுகாலி, உணவட்டுன பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையம் ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக வந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(12) உணவட்டுன சுற்றுலா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சம்பந்தப்பட்ட மசாஜ் மையத்தின் 38 வயதுடைய ஊழியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது நடவடிக்கை 

கடந்த 6-ஆம் திகதி சிகிச்சை அளிப்பதாகக் கூறி குறித்த நபர் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய பெண்! சந்தேகநபர் அதிரடி கைது | Suspect Arrested Allegedly Abuse Australian Woman

இது தொடர்பாக சுற்றுலாப் காவல்துறை பிரிவுக்கு இன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து, உணவட்டுன சுற்றுலாப் காவல்துறை பணியகம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments