நோர்வேயில் நிகழ்ந்த கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட ஈழத்தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நிட்டாட்டல் (Nittedal) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தை

விபத்தில் பலியானவர் யாழ்ப்பாணஸ்த்தை சேர்ந்த  மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடையஆவார்.

எதிர் திசையில் வந்த சொகுசு கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மற்றுமொருவர் ஹெலிகாப்டர் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிற ஆடம்பர SUV ரக காரின் ஓட்டுநர் மீது, அலட்சியமாக வாகனத்தை செலுத்தி மரணத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான சொகுசு காரில் பயணித்த ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த பகுதியில் 60 கி.மீ வேக வரம்பு மட்டுமே உள்ள போதிலும், குற்றம் சாட்டப்பட்ட கார் மிக அதிவேகமாக எதிர் திசையில் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர். விபத்துக்குள்ளான இந்த சொகுசு கார், விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் 2.3 மில்லியன் குரோனர் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

இது வெறும் 3.3 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டக்கூடிய, மணிக்கு 306 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன காராகும். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிட்டாட்டல் நகர மேயர் ரோன் வினாம் (Rune Winum) தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவவும், அவர்களுக்குத் தேவையான அவசர மனநல ஆலோசனைகளை வழங்கவும் நகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளதாக அவஅவர் குறிப்பிட்டுள்ளார். )

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments