தமிழர் பகுதியில் பயங்கரம் ; நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதிமட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாவற்கொடிச்சேனை, தும்பாலஞ்சோலையில் வயல் காவலாளியாக பணி புரிந்த நெடியமடு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 63 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கொலை சம்பவமாக இருக்கலாம்…
நேற்று (24) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்த நபருக்கு தலையில் வெட்டுக் காயம் காணப்படுவதாகவும் இது கொலை சம்பவமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
