தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான பிரிகேடியர் பால்ராஜை நாடாளுமன்றில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் நினைவு கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது கொழும்பில் அமைந்துள்ள நாடாளுமன்றத்திற்கு அருகே இன்று(09.06.2026) இடம்பெற்றுள்ளது.

அமைப்பு சார்ந்த கொண்டாட்டங்கள்

முன்னதாக, கடந்த மே 18அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நாடாளுமன்றத்திலே “எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் எம்மை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய பிரிகேடியர் பால்ராஜ் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர்.

உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் இற்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் குறித்த விடயத்தை அடிப்படையாக வைத்து தென்னிலங்கை தரப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள், “நாடாளுமன்றத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு சார்ந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் பிரிகேடியர் பால்ராஜ் நினைவுகூறப்பட்டார்” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை அளிக்க போராட்டக்காரர்கள் முயன்றபோது, ​​பொலிஸாருக்கும் போராட்டக்காரருக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments