ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான கடல்வழி முற்றுகையை விலக்கிக்கொள்ளவும் முடக்கப்பட்ட ஈரானின் 25 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவிக்கவும் முதற்கட்டமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாக ஒடுக்காமல் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதித்தது, அவர் ஈரானிடம் தோல்வியடைந்து பின்வாங்குகிறார் என்ற விமர்சனத்தை உள்நாட்டிலேயே ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடி உலகப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. இந்த கடுமையான அழுத்தமே ட்ரம்ப் நிர்வாகத்தைப் பேச்சுவார்த்தைக்கு வரக் கட்டாயப்படுத்தியது.

இந்த புதிய அமைதி ஒப்பந்தத்தில் லெபனானில் போர்நிறுத்தம் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர இஸ்ரேலியப் படைகள் தங்களது ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை இல்லை.

இதனால் அதிருப்தியடைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா மற்றும் லெபனானில் தங்களது இராணுவ நடவடிக்கை தொடரும் என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்கா பின்வாங்குவதால் ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளான ஹிஸ்புல்லாவிடம் இருந்து இஸ்ரேலுக்கு நேரடிப் பாதுகாப்பு அச்சுறுத்தல் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் இவை குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments