மகளிர் உலகக் கிண்ணம் இருபதுக்கு-20 தொடரின் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியில், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி | West Indies Women S Team Defeats Sri Lanka

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி, 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணியின் சார்பில் நிலக்‌ஷிகா டி சில்வா அதிகபட்சமாக 30 ஓட்டங்களைப் பதிவு செய்தார்.

99 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியையும் தனதாக்கிக் கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி தொடரில் முக்கியமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments