19 வயது யுவதியை தேடும் பொலிஸார்; பொதுமக்களிடம் கோரிக்கை

பதுளை ஈட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவில் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ள 19 வயதுடைய யுவதி ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் உதவி வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஹாலி எல பகுதியைச் சேர்ந்த அவரது தாயாரால் கடந்த மார்ச் மாதம் தனது மகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

19 வயது யுவதியை தேடும் பொலிஸார்; பொதுமக்களிடம் கோரிக்கை | Police Searching For 19 Year Old Woman Missing

இதனையடுத்து ஈட்டம்பிட்டிய பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, அது தொடர்பான விபரங்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்யப்பட்டுள்ளன.

காணாமல் போன இளம் பெண் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமும், சாதாரண உடலமைப்பும், தோள் வரை வெட்டப்பட்ட தலைமுடியும் கொண்டவர் என விவரிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் எவரும் இருப்பின் ஈட்டம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை (OIC) 071-8591528 என்ற இலக்கத்திலோ,அல்லது ஈட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தை 055-2294965 என்ற இலக்கத்திலோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments