நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின்றன.

அவற்றில், “குடு சலிது” என அழைக்கப்படும் சலிது குணவர்தன என்ற நபர் தற்போது பிரான்ஸில் பதுங்கியிருப்பதாகவும், அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நீர்கொழும்பு சிறையில் பயங்கரம் ; பிரான்சிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி | Terror In Negombo Prison Main Convict Escap France

மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காவல்துறையினருக்கு பல மில்லியன் பணம் வழங்கியதாகவும், முன்னாள் ஜனாதிபதியின்  மகன் இவரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்ததாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நபரை பிரான்ஸில் கண்டால் பிரான்ஸ் தூதரகத்திலோ அல்லது பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு நிறுவனத்திலோ தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் இடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை உள்ளடக்கிய முழுமையான காணொளியை இங்கு காணலாம்…..

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments