திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 20 மாணவர்கள் 02 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

மாணவர்களில் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு வகை விதையை உட்கொண்ட பிறகு, இந்த மாணவர்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார். ஆமணக்கு விதையை குறித்த மாணவர்கள் உட்கொண்டிருக்கலாம் என மருத்துவ அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

கந்தளாய் பேராறு பகுதியில் தரம் 06 இல் கல்வி கற்ற 20 மாணவர்களும் 02 மாணவிகளுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாணவன் வழமையாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்குக் கொண்டுசென்று பகிர்ந்து உண்பது வழமை எனவும் இன்றைய தினம் (20) சூரியகாந்தி விதைகள் என நினைத்து சூரியகாந்தி விதைகளுடன் வீட்டில் இருந்த ஆமணக்கு விதைகளையும் கொண்டுசென்று பகிர்ந்து உண்டுள்ளார்.

இதனாலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வரும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந் நிலையில் இந்த சம்பவத்தால் அங்க்கு பரப்பான நிலைமை காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments