ஈரானுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தான் இன்னும் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையகத்தில் (EPA) நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தீய எண்ணங்கள் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த ட்ரம்ப், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராக நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.

அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் ஆனால் அவர்கள் அதற்கு இன்னும் தயாராகவில்லை என்றே நான் கூறுவேன்.

ஈரானுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை: ட்ரம்ப் திட்டவட்டம் | Trump Not Ready For Iran Ceasefire Talks

அவர்களுக்கு இன்னும் இதுபோன்ற தாக்குதல்களே தேவைப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானிய தலைவர்களுக்கு சில தீய எண்ணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் அணுஆயுதம் பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments