நுவரெலியா மாவட்டம், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10-ல் கல்வி கற்கும், மோரா பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி, குறித்த மாணவி வீட்டில் இருந்த குளிசைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார். இதன் காரணமாக திடீரென மயக்கமடைந்த அவர், உடனடியாகப் பொகவந்தலாவ வைத்தியசாலையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், வைத்தியர்களின் தீவிர முயற்சிகளையும் மீறி சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து பொகவந்தலாவப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments