பொதுமக்களின் உதவி நாடும் பொலிஸார் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீரிகம கிரிவுல்ல – பஸ்யால வீதிப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலியான நபர் ; பொதுமக்களின் உதவி நாடும் பொலிஸார் | Police Seek Help To Identify Crash Victim

 உயிரிழந்தவரின் அடையாளம்

விபத்தினால் சடலம் கடுமையாக சிதைவடைந்துள்ளதால் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரை உறுதிப்படுத்த முடிவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் என கூறப்படுகிறது.

உயிரிழந்த நபரின் முகத்தில் தாடி உள்ளதுடன், சடலமானது இளம்பச்சை நிற நீண்ட காற்சட்டையும், அதே நிறத்தில் அரைக்கை மேற்சட்டையும் அணிந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாளங்கள் உள்ள நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்திருப்பின்,

மீரிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071 8591625

மீரிகம பொலிஸ் நிலையம் – 033 2274322 ஆகிய இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments