வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

அதேநேரம், விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவர், கனகராயன் குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

பொலிஸார் நடவடிக்கை.. 

சம்பவத்தின் போது, மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் இருந்து பின்னால் வந்த கப் ரக வாகனம், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.

இவ்விபத்தில் கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments