மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள் களவாளப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் சம்பவம் நடத்த நேற்றையதினமே(02)  களுவாஞ்சிகுடி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்துள்ளனர்.

யுவதியின் கைது

அதனைதொடர்ந்து, உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இன்றையத்தினம் திங்கட்கிழமை(03) களவாடப்பட்ட பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பில் பெறுமதிமிக்க தங்க ஆபரணங்கள் திருட்டு! அதிரடியாக கைது செய்யப்பட்ட யுவதி | 24 Half Pounds Of Stolen Gold Jewelry Recovered

அதன்படி, கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிமாவட்டத்திலிருந்து அக்குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments