கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்திற்கு அருகில் எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இன்று(03.08.2026) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் 

இரணைமடு குளத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேட்கொண்டவர்களினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி தடயவியல் ஆய்வு நிபுணர்கள் சான்றுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தை மாவட்ட நீதிபதி பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காகவும், உயிரிழந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இது திட்டமிட்ட கொலையா அல்லது தவறான முயற்சியால் ஏற்பட்ட உயிர்மாய்ப்பா என்ற ரீதியில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments