ஈரான் இராணுவத்தின் தரைப்படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட எச்சரிக்கையில்,

ஈரானுக்குள் எந்தவொரு வெளிநாட்டு தரைப்படை தலையீடும் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு உடனடியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி எச்சரிக்கை

“அமெரிக்க இராணுவ வீரர்கள் யாரேனும் ஈரானில் கால்பதித்தால், அவர்களைத் தடுத்து நிறுத்துவோம்” என ஜஹான்ஷாஹி கூறியதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எதிரிகளின் எந்தவொரு நடவடிக்கைக்கும் உறுதியான மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அமையும் வகையில் பதிலளிக்க ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஈரான் இராணுவ தரைப்படைகள் முழுமையான போர்த்தயார் நிலையில் இருப்பதாகவும், எதிரிகளின் நடமாட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டின் எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து வருவதாகவும் ஜஹான்ஷாஹி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகள் நேரடியாக இடம்பெறாமல், இடைத்தரகர்கள் மூலம் தொடர்வதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை

“தற்போது அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இடைத்தரகர்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன” என அவர் அரச ஊடகமான IRIB-க்கு தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாகவும், அமெரிக்கா முன்னர் செய்த ஒப்பந்த மீறல்களுக்கு தீர்வு காணும் வரை நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் திரும்பாது என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் ஈரானில் கால்பதித்தால் கடும் பதிலடி – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை | Will Cut Them Off Iran General Warns Us Ground

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்லும் பாதை மற்றும் அதற்கான சட்டரீதியான நடைமுறைகள் தொடர்பாக ஓமானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அராக்சி கூறியுள்ளார்.

எனினும், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது அமெரிக்காவிடமிருந்து இழப்பீடு உள்ளிட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு உட்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை

ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னர் பயன்படுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து பிரிப்பு திட்டம் (TSS) இனி ஏற்றுக்கொள்ள முடியாது என ஈரான் தெரிவித்துள்ளதாகவும், புதிய பாதை ஒன்றை உருவாக்க வேண்டியிருப்பதாகவும் அராக்சி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பல்வேறு தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் ஈரானில் கால்பதித்தால் கடும் பதிலடி – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை | Will Cut Them Off Iran General Warns Us Ground

மறுபுறம், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உடன்பாடு விரைவில் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும், தடையின்றி வர்த்தகக் கப்பல்கள் மீண்டும் செல்லும் வகையில் உடன்பாடு அறிவிக்கப்பட்டவுடன், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments