பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா ; அதிர்ச்சியில் உறைந்த பெண்கள் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா ; அதிர்ச்சியில் உறைந்த பெண்கள் | Hidden Camera In The Women S Toilet

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண்களில் ஒருவர் கழிப்பறைக்கு அருகில் இரண்டு துளைகள் காணப்பட்ட காகிதத் துண்டொன்றை அவதானித்துள்ளார்.

அதனை பரிசோதித்தபோது, காகிதத்திற்குள் கைபேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த கைபேசியை எடுத்துச் சென்ற அவர், சம்பவம் தொடர்பில் ஏனைய பெண்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர், குறித்த கைபேசியில் இருந்த சிம் அட்டையை அகற்றி தனது தனிப்பட்ட மடிக்கணினியில் பயன்படுத்திப் பார்த்தபோது, அதில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. பரணாலியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments