மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட மஞ்சநாதொடுவாய் வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மஞ்சந்தொடுவாய் மஜீத் வீதியிலுள்ள வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 49 வயதுடைய திருமணமாகாத ஆண் ஒருவரின்சடலமே இவ்வாறு மீட்கப்பட்டு

சம்பவ இடத்திற்கு சென்ற பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

சடலத்தின் அருகே தூக்கு கயிறு காணப்பட்டதுடன், சடலத்தின் கழுத்தில் குறித்த கயிற்றின் ஒரு பகுதி காணப்பட்டதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments